தி காவிரி பொறியியல் கல்லுாரியில் முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா-
மேச்சேரி: மேச்சேரி தி காவிரி பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுகம் மற்றும் வரவேற்பு விழா நடந்தது. டீன் நந்தகுமார்(அட்மிஷன்) வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ரேவதி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினரான, திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்-ராமன், மாணவர்கள் தனித் திறன்களை வளர்த்து தொழில் நிறுவ-னங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தயார் படுத்திக்கொள்ள அறிவு-றுத்தினார். மேலும் அவரது வாழ்க்கை சவால்களை பகிர்ந்து கொண்டார்.
தி காவிரி கல்வி நிறுவன கவுரவ தலைவர் நடேசன், பொறி-யியல் துறையின் தற்போதைய முக்கியத்துவம் குறித்து எடுத்து-ரைத்தார். தலைவர் அன்பழகன், போட்டி நிறைந்த உலகுக்கு ஏற்ப மாணவர்கள், எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என விளக்கினார்.செயலர் இளங்கோவன், டாக்டர் அப்துல்கலாமின் பொன்மொ-ழிகளை மேற்கோள்காட்டி, கல்வியின் மகத்துவத்தை உணர்த்-தினார். இணை செயலர் ஹரிசங்கர், தாளாளர் ராமநாதன், மாண-வர்களை ஊக்கப்படுத்தி பேசினர்.
முதல்வர் துரைசாமி, துறைத்தலைவர்களை மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் அறிமுகப்படுத்தினார். தேர்வு கட்-டுப்பாட்டாளர் பெஞ்சமின் லாசரஸ், பொறியியல் கல்லுாரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
மேலும்
-
50 % ஈக்விட்டி முதலீடுகளை ஈர்த்த ஸ்மால்கேப், மிட்கேப் பண்டுகள்
-
கூட்டுறவுத்துறையில் குறைதீர் கூட்டம் மண்டல இணைப்பதிவாளர் தகவல்
-
தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு
-
அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினம்
-
ஜி.ஹெச்.,ல் குவியும் நோயாளிகள்
-
சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் அரூர் நகரம்