இடைத்தேர்தல் ஒரு திருப்புமுனையை உருவாக்கும்; அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
ஈரோடு: ''இடைத்தேர்தல் ஒரு திருப்புமுனையை உருவாக்கும்; முதல்வர் விஜய்யை காண முடியுமா என எங்கு பார்த்தாலும் மக்கள் துடிக்கிறார்கள்'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
ஈரோட்டில் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், தமிழக முதல்வர் இன்று தேர்தல் பிரசாரத்தில் ரோடு ஷோ நடத்துகிறார். ஒரு சிறப்பு மிக்க, ஒரு வரலாறு படைக்கும் தொகுதியாக தாராபுரம் அமையும்.
முதல்வர் விஜய்யை காண முடியுமா என எங்கு பார்த்தாலும் மக்கள் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள்; இது மக்களுக்கு கிடைத்து இருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்; இந்த தேர்தல் வெற்றி என்பது தமிழக வரலாற்றில் இடம்பெறும் வகையில் அமையும்.
இந்த தேர்தலை பொறுத்தவரையும், மற்ற தேர்தலை காட்டிலும் இந்த தேர்தல் ஒரு திருப்புமுனையை உருவாக்கும்; அடுத்த இடைத்தேர்தலில் திமுகவோ, அதிமுகவோ போட்டியிடாத வகையில், இத்தேர்தலில் தவெக வெற்றி வாகை சூடும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
திருப்புமுனையை த வெ க எதிர்பார்த்த மாதிரியே அமையும் . அதாவது டெபாசிட் வாங்கமுடியாமல் போய் வாயடைத்து போகும் .உங்களிடம் பதவியை எதிர்பார்த்து ஓடிவந்தவர்கள் நடுவீதியில் நிற்பார்கள் . ஒருவழியாக பாஸ்கரன் சேர்ந்த விஷயம் தெரிந்துவிட்டது . அவர் மேல் இருந்த ஊழல் வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டுவிட்டது . மீதம் உள்ளோரின் வழக்குகளையும் தள்ளுபடிசெய்யவே சேர்ந்தார்கள் .
ஊழல்மிகு திருட்டு மாடல் தீயசக்திக்கு ஓட்டு போட்டால் கிடைப்பது நாமம் தான்
வோட்டு வாங்க கொங்கு தேச குல தெய்வமான மூலனூர் வஞ்சி அம்மன் கோவிலுக்கு விஜயமாம் ....அப்படியே வாயில் முதுகில் அலகு குத்தி காவடி எடுத்து தொங்கினால்தான் அம்மன் வரம் கொடுக்கும் என்று பதில் வந்ததாம் ...
இரண்டு தொகுதி மக்களும் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்றால்
கண்டிப்பாக நடிகர் ரீல்ஸ் விஜய்க்கு இந்த இடைத்தேர்தல் திருப்புமுனை உண்டாக்குவது உறுதி.
சரியா சொன்னீங்க. உங்கள் ஆட்சிக்கு ஆதரவு தரும் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சொன்னது போல வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் புதிய உச்சத்தை த வெ க செய்ய்துள்ளதால் இனி வருக்கால தேர்தல்களுக்கு இது ஒரு திருப்புமுனை தான் . சந்தேகமேயில்லை
இந்த செங்கொ தொல்ல தாங்க முடியல.என்னமோ மகாபாரத பீஷ்மர் ரேஞ்சுக்கு பில்டப் இவருக்கு. நாலு வார்த்தை அர்த்தமுடன் பேசுவதே இவருக்கு நீட் எழுதுவது போல.
பதவி சுகத்திற்காக அலையும் முதல்வர்
மக்கள் நலனுக்காக இந்த ரோடு ஷோ நடைபெறஙில்லை.
ஐயா செங்கோட்டையன் அவர்கள், சென்ற தேர்தலில் மக்களிடையே எழுச்சியை கண்டார், இந்த இடைத்தேர்தலில் துடிப்பை காண்கிறார், இரண்டிற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?
அமைச்சர் செங்கோட்டையன் கூறுகிறார்.விஜயைப் பார்க்க மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்களாம். அவரைப் பார்ப்பது பெரிய வரப்பிரசாதமாம்.ஆமாம் விஜய் என்ன பெரிய கிருஷ்ண பரமாத்மாவா? அவரைப் பார்க்க மக்கள் துடிக்க?வரப்பிரசாதமாக அமைய? நீங்களே அங்க அருண்ராஜுக்கு அடிமை வேலை பார்க்குறீங்க!கொஞ்சம் பார்த்து உருட்டுங்க அண்ணே? ரொம்ப உருட்டாதீங்க.
அமைச்சரே வாசாத்தி உங்களுக்கு ஞாபகம் இருக்குனு நினைக்கிறேன் இது எல்லாம் நினைவில் வைத்துவிட்டு எப்படி ஒரு சூட்டிங் முதலமைச்சர பார்க்கிறது வரப்பிரசாதம் சொல்றீங்க நீங்க எல்லாம் எப்படி எம்ஜிஆர் இன் விசுவாசி அம்மாவின் விசுவாசம் சொல்றீங்க உங்களுக்கெல்லாம் துளி அளவும் மானம் ஈனம் கிடையவே கிடையாது அதே மாதிரி ஜனங்களை மாற்றி பாக்குறீங்க பதவி ஆசை பதவி வெறி நீங்களும் மனிதர்களே கிடையாதுமேலும்
-
தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள்: சந்தைக்கடையாக பஸ் ஸ்டாண்ட்
-
பைனலில் ஈஸ்ட்மேன் - சி.ஆர். கார்மென்ட்ஸ்
-
இயற்கைக்குப் புதிய சவால்: வன உயிர்கள் வாசல் தேடும் காலம்
-
ஓட்டு வங்கி பயத்தில் ஸ்மிட் மச்சாரை பாராட்டாத ராகுல்: பாஜ
-
உடல்ரீதியாக கிண்டல் செய்வது மானபங்கம் ஆகாது: ஐகோர்ட்
-
காலாவதி மருந்து விற்பனை செய்த வழக்கு :துருக்கியிலிருந்து லேபிள் வாங்கியது அம்பலம்