பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சும்மாவிட மாட்டேன்: முதல்வர் விஜய் ஆவேசம்
தாராபுரம்: என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்; பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சும்மாவிட மாட்டேன் என முதல்வர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில், இன்று (அக் 04) பிரசாரம் ஓய்கிறது; தாராபுரத்தில் இன்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரித்த முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். ரோடு ஷோவில் முதல்வர் விஜய் பேசியதாவது: இரண்டாவது முறையாக இந்த தாராபுரம் தொகுதிக்கு வந்த என்னை பார்த்து தேர்தல் பயம் என்று சொல்கின்றனர்.
ஒரே ஒரு உண்மை!
ஒரே ஒரு உண்மையை மட்டும் நான் சொல்லிவிட்டு போய்விடுகிறேன்; திமுகவுக்கும், மற்றும் பலருக்கும் நீங்கள் ஓட்டு அளித்தால், பெண்களை அசிங்கம், அசிங்கமாக பேசுபவர்களை ஆதரிக்கும் மாதிரி ஆகிவிடும்; நம் வீட்டு பெண்கள், அக்கா, அம்மா, தங்கைகளை அவதூறாக பேசுபவர்களை ஆதரிக்கும் மாதிரி ஆகிவிடும். ஓட்டுக்காக நான் சொல்லவில்லை; நேற்று முன்தினம் ஸ்டாலின் சார் வந்தார்; என்ன பேசிவிட்டு போனார், அப்பாவும், பிள்ளையும் தாராபுரத்திற்கு வந்து, தயவு செய்து திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க, கோடான கோடி நன்றி என்று இப்பொழுதே சொல்லிவிட்டு போய்விட்டார்கள். பொதுவாக தேர்தலுக்கு பிறகு தான் கோடான கோடி நன்றி என்று சொல்வார்கள். அதனை இப்பொழுதே சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.
சும்மா விடமாட்டேன்!
காது கொடுத்து கேட்க முடியாத அளவு சத்தியபாமா குறித்து முதல்வர் விஜய் பேசிட்டு போய் இருக்கிறார்; மறக்கிற மாதிரியாக பேசிவிட்டு போய் இருக்கிறார். அவர் மட்டுமா, அவர் வளர்த்து வைத்து இருக்கும் எல்லோரும் இப்படி தான் பேசிவிட்டு போகின்றனர். என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்; நான் அதை தாங்கி கொள்கிறேன். அதை நான் பொறுத்துப்பேன். ஆனால் நமது சகோதரியை பற்றியோ, நமது வீட்டில் இருக்கும் அம்மா, அக்கா, தங்கைகளை பற்றி நீங்கள் பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.





இது இன்றைக்கு, நேற்று நடக்கின்ற கூத்து கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மேடம் காலத்திலிருந்து இதே மாதிரிதான் அசிங்கமாக, அவதூறாக இதே பொழப்பாக வச்சுட்டு இருக்காங்க. ஆனால், அன்னைக்கு அவங்க இரண்டு பேரும் ரொம்ப தைரியமாக, ரொம்ப கவனமாக இருந்தனர். இந்த தி.மு.க., உடன் கை கோர்க்க கூடாது. ஆனால், இன்றைக்கு என்ன நடக்குது? இந்த மற்றும் பலரும் இந்த தி.மு.க.,வும் மறைமுகமாக கூட்டு சேர்ந்து, யாரோடெல்லாம் கூட்டு சேர கூடாதோ அவங்களோடு எல்லாம் கூட்டு சேர்ந்து, இந்த மாதிரி பண்ணிட்டு இருக்காங்க.
விசில் சின்னத்துக்கு...
அதனால் மக்களே, அக்., 6 ம் தேதி காலையில் சும்மா பக்காவா ரெடியாகி, வாக்காளர் கார்டை கையில் எடுத்துகிட்டு, உங்க வீட்டில் இருக்கின்ற எல்லோரையும் கூட்டிக்கிட்டு, உங்க வீட்டு, பக்கத்து வீட்டு சொந்தங்கள் எல்லாரையும் கூட்டிக்கிட்டு, உங்க பக்கத்துல இருக்கிற பூத்துக்கு போய் விசில் சின்னத்துக்கு நேராக இருக்கின்ற அந்த பட்டனை ஒரு அழுத்து அழுத்துங்க. உங்க சின்னம், நமது சின்னம், நமது வெற்றி சின்னம். அப்பறம் என்னங்க நம்பிக்கையாக இருங்க. நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
@block_P@
மாட்டு வண்டியில்...
தாராபுரத்தில் முதல்வர் விஜய் மாட்டு வண்டியில் சென்று பிரசாரம் செய்தார். வேலு நாச்சியார் வேடமணிந்த சிறுமியை பிரசார வாகனத்தில் ஏற்றி முதல்வர் விஜய் கொஞ்சி மகிழ்ந்தார்.block_P
தாராபுரம் மூலனூர் வஞ்சியம்மன் கோவிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரமாண்ட ரோடு ஷோ; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
விஜய் பேசுகின்ற அளவுக்குத்தான் இந்த திமுகவினர் பேசுகின்றார்கள். அதிலும் ஸ்டாலினின் பேச்சு ஏற்றுக்கொள்ளவே முடியாத பேச்சு. தோல்வியின் விரக்தி என்றாலும் அதற்காக இப்படியா பேசுவது? வாய்தான் திமுகவின் முதல் எதிரி. அடுத்துதான் ஊழலும் சொத்துக்குவிப்பும். இவர்களை அடக்க விஜய்தான் இன்றைய தேதியில் இருக்கும் ஒரே ஒரு அரசியல்வாதி. பழனிச்சாமியும் ஸ்டாலினும் கள்ள கூட்டணியில் இந்த தேர்தலை சந்திக்கின்றார்கள் என்பதை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அறிவோம் நாம். திமுக தோற்பது என்பது காலத்தின் கட்டாயம். அதிமுகவுக்கு திமுகவினர் வாக்களிப்பது என்பதும் கள்ளத்தனமான கூட்டணி. இது ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டதுதான். அப்படி இருந்தும் திராவிட கட்சிகளின் தோல்வி உறுதிதான்
தமிழ் மக்களை ஏமாற்றும் வேலை ஜரூராக நடக்கிறது... ஆண்களை பெண்களை யாரை பற்றி அவதூறு பேசினாலும் ... தவறுதான்... அப்போ உங்களைத்தான் சும்மா விட கூடாது.
MGR ஐ போற்றி கொண்டு அவர் கட்சியையே உடைத்து நீங்கள் செய்யும் தில்லாலங்கடி வேலையை MGR ஆன்மாவும் மன்னிக்காது. மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.
வாய்ப்பு ஒருத்தர் கிட்ட பிரபஞ்சம் தருகிறது என்றால் sure may be he is pure heart soul ஆனா அதை சரியா பயன்படுதலைன்னா அதே வாய்ப்பை பிரபஞ்சம் திருப்பவும் எப்ப பிடுங்கி அதல பாதாளம் தள்ளிவிடும் இது TVK சரியாக பொருந்தும் என்று நினைக்கிறேன்
50 ஆண்டுகளாக சினிமா பைத்தியம் பிடித்த தமிழனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.. சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று ஒருவரும் சொல்லவில்லையோ?
தனி விமானம் தனி ஹெலிகாப்டர் கடைசியாக மாட்டு வண்டி . மக்கள் நல கூட்டனி 2.0 வின் நிலமை இப்ப எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லும் நிலையில் தான் உள்ளது மக்கள் மத்தியிலே பேசிக்கொள்கிறார்கள்
தன் கட்சி கொள்கை தலைவர்களில் ஒருவராக வைத்திருக்கும் எம்ஜிஆர் நடித்த ஓரிரு படங்கள் தவிர மற்ற படங்களை இன்றைய குழந்தைகள் பார்த்தால் ஏதாவது ஒரு விதத்தில் நல்ல விசயத்தை கற்றுக் கொள்ள முடியும் இதுவே தற்குறி தலைவன் நடித்த படங்களை குழந்தைகள் பார்த்தால் ரவுடியாகவும் தெல்லவாரியாகவும் குடிகாரனாகவும் பொம்பள பொறுக்கியாகவும் மட்டுமே ஆக முடியும் இந்த கூந்தல்ல பெண்களை பற்றி அவதூறாக பேசினால் விட மாட்டேன் என்று குறைப்பது எதற்கு? எடப்பாடி யார் சொல்லியும் திருந்தாமல் எல்லோரையும் அன்று கட்சியை விட்டு தூக்கி எறிந்ததன் விளைவுதான் இன்று அனுபவிப்பது எடப்பாடி ஒன்றும் தூய்மையான ஆள் கிடையாது தற்குறி கூட்டமும் அப்படியே நடுவில் திருட்டு முன்னேற்றக் கழகமும் சலைத்தது அல்ல
சென்னை கொண்டித்தோப்பில் பச்சிளம் பெண் குழந்தை சடலமாக மீட்பு ...பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ..குழந்தையின் கை கால்களை தெருநாய்கள் கடித்து தின்ற கொடூரம் ...பச்சிளம் பெண் குழந்தையை தெருவில் வீசி சென்றது யார் என்று போலீஸார் விசாரணை ......கள்ள சாராயம் பாலியல் குற்றம் கள்ள காதல் போதை கஞ்சா மெத்து என்று சீரழிந்த சமூகம் ....படிக்கவே முடியாத செய்திகள் வருது ....இந்த லட்சணத்தில் லாட்டரி ஆட்சி ..இதில் பெண்கள் பாதுகாப்பாம் ..படித்து முன்னேறிய விடியல் திராவிட மாநிலம் ...
மை காயுமுன்பு இரண்டு நாளில் ஒட்டு போட்ட மக்களை கேவலப்படுத்தியஅதிமுக அயோக்கிய திருட்டு பிறவிகளையும் பதவிக்காக அவர்களை விலைக்கு வாங்கிய கேவலமான கூத்தாடி அயோக்கியனுக்கு இதை பேச வக்கில்ல
வேறு ஒரு ஜெயித்தபிறகு அந்த பதவியை ராஜினாமா செய்து , அதே நபரை இன்னொரு கட்சி வேட்பாளாரா நிக்க வைக்கிற தவேக, ஒரு திருட்டு சக்தி. குட்கா புகழ் நபர்களை கட்சியில் சேர்த்த தவேக ஒரு திருட்டு சக்தி.மேலும்
-
வெளிநாட்டு ஊழியர்கள் ஒப்பந்த அடிமைகளா? அமெரிக்க துணை அதிபருக்கு இந்தியா கண்டனம்
-
ஜேஎன்யு பல்கலை பாலியல் புகார்: பேராசிரியர் பணியில் இருந்து காங்., - எம்.பி., நீக்கம்
-
அனுவாவி சுப்பிரணியசுவாமி கோவில் 'ரோப் கார்' திட்டம் கைவிடப்பட்டது: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்
-
கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
-
த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
-
ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்