பஸ்சுக்குள் விளையாடி மகிழ்ந்த குரங்குகள்: நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்
பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் பாட்டவயல் பகுதி மாநில எல்லையாக உள்ளது. இப்பகுதியில், முதுமலை புலிகள் காப்பகம், கேரளா முத்தங்கா வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் கூடலுார் வனக்கோட்டம் உள்ளதால், வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் யானைகள் வந்து செல்கின்றன. இப்பகுதி உலா வரும் குரங்குகள் கடைகள் மற்றும் பயணிகளிடம் உணவு பொருட்களை பறித்து செல்வதால் மக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியல் கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி செல்லும் கேரளா மாநில அரசு பஸ் இங்கு நிறுத்தப்பட்டிருந்தது. பஸ்சிற்குள் குரங்குகள் ஏறி விளையாடின. இதனால், பயணிகள் பஸ்சில் ஏறமுடியாத நிலையில், ஒரு சிலர் ஏறிய பின் அச்சத்தில் இறங்கினர். டிரைவர், கண்டக்டரும் பஸ்சில் ஏறாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர். தொடர்ந்து, அப்பகுதி மக்கள் குரங்குகளை விரட்டிய பின்னர் பஸ் அங்கிருந்து பயணிகளை ஏற்றி சென்றது. இதனால், இப்பகுதியில் வரும் அரசு பஸ்களின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
வி.ஏ.ஓ., அலுவலகங்களில் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு
-
சொத்து விபரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
-
நாகரிகமான முறையில் இடைத்தேர்தல்; இனி வரும் காலங்களில் இதையே பின்பற்றணும்; அமைச்சர் ராஜ்மோகன்
-
திமுக மாஜி வேலு மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்
-
அதிக மக்கள் பயன்பாடு ; டாப் 10ல் இரு முக்கிய தமிழக ரயில் நிலையங்கள்
-
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்த இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு; ஐநாவில் இந்தியா கண்டனம்