அதிக மக்கள் பயன்பாடு ; டாப் 10ல் இரு முக்கிய தமிழக ரயில் நிலையங்கள்

புதுடில்லி: இந்தியாவில் பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பொது போக்குவரத்தாக ரயில்வே இருந்து வருகிறது. நாள்தோறும் சுமார் 9.30 கோடி பயணிகள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2023-24ம் ஆண்டில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் 'டாப் 100' ரயில்நிலையங்களின் பட்டியலை ரயில் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், முதல் 4 இடங்களை மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தானே, கல்யாண், ஹவுரா மற்றும் மும்பை பிடித்துள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த தாம்பரம் ரயில்நிலையம் 8வது இடத்திலும், சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில்நிலையம் 10வது இடத்தையும் பிடித்துள்ளது.

டாப் 10 ரயில்நிலையங்களின் பட்டியல்

தானே - 9.30 கோடி பயணிகள்

கல்யாண் - 8.37 கோடி பயணிகள்

ஹவுரா - 6.13 கோடி பயணிகள்

மும்பை - 5.17 கோடி பயணிகள்

சீல்டா- 5.14 கோடி பயணிகள்

பன்வேல் - 4.70 கோடி பயணிகள்

புதுடில்லி - 3.97 கோடி பயணிகள்

தாம்பரம் - 3.28 கோடி பயணிகள்

தாடர் - 3.23 கோடி பயணிகள்

எம்ஜிஆர் சென்னை மத்தியம் - 3.06 கோடி பயணிகள்

இந்தப் பட்டியலில் சென்னை எழும்பூர் 18வது இடத்தில் உள்ளது. கோவை (1.02 கோடி) 37வது இடத்திலும், பெரம்பூர் ரயில்நிலையம் (88 லட்சம்) 48வது இடத்திலும், திருச்சி ரயில்நிலையம் (79 லட்சம்) 57வது இடத்திலும், மதுரை ரயில் நிலையம் (75 லட்சம்) 65வது இடத்திலும் உள்ளன.

Advertisement