நாகரிகமான முறையில் இடைத்தேர்தல்; இனி வரும் காலங்களில் இதையே பின்பற்றணும்; அமைச்சர் ராஜ்மோகன்

சென்னை: "தவெகவின் முதல் இடைத்தேர்தல் நாகரிகமான முறையில், அமைதியான முறையில் நடந்துள்ளது. இனிவரும் காலங்களிலும், அனைத்து கட்சிகளும், இதை பின்பற்ற வேண்டும்" என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி: முதல்வர் விஜய், செய்தியாளர்களை சந்திக்காததற்கான காரணம், அனைவருக்கும் தெரியும். எங்கள் ஆட்சி தொடங்கிய நாள் முதல், நான், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் உள்ளிட்ட அனைவரும், தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறோம்.

எளியவர்களான எங்களுக்கு வாய்ப்பளித்து, முதல்வர் சந்திக்காமல் உள்ளார். மாநில பிரச்னையாக இருந்தாலும், தேசிய பிரச்னையாக இருந்தாலும், அனைத்தும் முக்கியமானவைதான். ஞானேஷ் குமார் விவகாரம் தொடர்பாக, நானும் தொடர்ந்து பேசி வருகிறேன்.

அனைத்து விஷயங்களிலும், மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கலந்துரையாடி, முதல்வர் இறுதி முடிவுகளை எடுத்து வருகிறார். த.வெ.க.,வின் முதல் இடைத்தேர்தல் நாகரிகமான முறையில், அமைதியான முறையில் நடந்துள்ளது. இனிவரும் காலங்களிலும், அனைத்து கட்சிகளும், இதை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement