திமுக மாஜி வேலு மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்
சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தி.மு.க., இளைஞரணி மாநாடு, கடந்த 2025 டிச., 14ல், திருவண்ணா மலையில் நடந்தபோது, மாநாட்டு திடலை சமன்படுத்த, மலப்பம்பாடி ஏரியில் இருந்து, 10 முதல் 23 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டது. இதனால், அரசுக்கு 8 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில், லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், வேலு, அவரது மகன் குமரன் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை ரத்து செய்யக் கோரி, வேலு, குமரன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி லட்சுமிநாராயணன் முன், விசாரணைக்கு வந்தபோது, 'உரிய அனுமதி பெற்றே, மணல் எடுக்கப்பட்டது. இது, முற்றிலும் கற்பனையாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. கவர்னர் அனுமதி பெறாமல், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என, வேலு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதி, விசாரணையை நவ., 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், எதிர் தரப்பு பதிலை கேட்காமல், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி மறுத்து விட்டார்.
மேலும்
-
டோல்கேட் அமைத்து கண்டபடி கட்டணம் வசூலிப்பதா?உயர்நீதிமன்றம் அதிருப்தி
-
வி.ஏ.ஓ., அலுவலகங்களில் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு
-
சொத்து விபரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
-
நாகரிகமான முறையில் இடைத்தேர்தல்; இனி வரும் காலங்களில் இதையே பின்பற்றணும்; அமைச்சர் ராஜ்மோகன்
-
அதிக மக்கள் பயன்பாடு ; டாப் 10ல் இரு முக்கிய தமிழக ரயில் நிலையங்கள்
-
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்த இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு; ஐநாவில் இந்தியா கண்டனம்