அரிசி விலை உயர்வை தடுக்க வேண்டும் அரசுக்கு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

பண்ருட்டி: தமிழகத்தில் அரிசி விலை உயர்வை தடுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நெல் விளைச்சல் போதிய அளவில் இல்லை. வேலை ஆட்கள் தட்டுப்பாடு, மின்கட்டண உயர்வால் நவீன அரிசி ஆலைகள் முடப்பட்டுள்ளன. விவசாயிகள் பல கஷ்டத்துடன் விளைவித்து மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் போது உழைத்து உழைப்பிற்கு விவசாயிக்கு உரிய விலை கிடைக்காததால், தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்து வருகிறது.

மாநிலத்தில் அரிசி பற்றாக்குறையை போக்க, பக்கத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அரிசியை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்த அரிசி கொண்டு வரும் வாகனங்களை அரசு திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் பண்டிகை காலங்களில் அரிசியின் விலை கிலோ 100 ரூபாயை தாண்டும் நிலை உருவாகும். அரசு மறுபரிசீலனை செய்து தமிழகத்தில் அரிசியின் விலை உயர்வை தடுத்திடவும், வரும் ஆண்டில் உற்பத்தியை அதிகரித்திட முயற்சிக்க வேண்டும்.

Advertisement