சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு, ஈரோடு மகிளா நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா சிறுவலுாரை அடுத்த அயலுாரை சேர்ந்தவர் வேலன், 49, கூலி தொழிலாளி. பாலபாளையம் என்ற பகுதியில், 2025 ஜூன், 30ல் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, சிறுவலுார் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து, வேலனை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் நீதிபதி சொர்ணகுமார் நேற்று தீர்ப்பளித்தார். வேலனுக்கு ஐந்தாண்டு சிறை, 5,000 ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் நிவாரண தொகை வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரைவரை காதலித்து கரம் பிடித்த மாணவி
-
18 கிராமங்கள் இணைப்பு செய்துள்ளதை விடுவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
சேலம் மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக உருவாக்க நடவடிக்கை
-
கிரானைட் வீரமணி மீதான வழக்கு: அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை
-
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
-
ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் 2வது நாள் காத்திருப்பு போராட்டம்
Advertisement
Advertisement