18 கிராமங்கள் இணைப்பு செய்துள்ளதை விடுவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஆத்துார்:திருவண்ணாமலை
மாநகராட்சியில், 18 கிராமங்கள் இணைப்பு செய்துள்ளதை, தமிழக அரசு
விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐக்கிய விவசாயிகள் சங்கம்
தெரிவித்துள்ளது.
ஐக்கிய விவசாயிகள் சங்க பொதுச் செயலர் வக்கீல்
கோவிந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாநகராட்சியுடன்,
18 கிராமங்களை இணைப்பு செய்யப்பட்டதற்கு ஆட்சேபனை
தெரிவிப்பதுடன், மாநகராட்சி இணைப்பு பட்டியலில் இருந்து, 18
கிராமங்களை விடுவிக்க வேண்டும் என, கிராம மக்கள், விவசாயிகள்,
மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருவது சரியானதாகும்.
அவ்வாறு புதிதாக இணைத்தால், கிராம மக்களுக்கு வருமானத்திற்கு
வழியில்லை. சொத்து, தொழில் வரி உயர்வு காரணமாக கூடுதல் சுமை தான்
மக்களுக்கு இருக்கும்.
அரசு
வழங்கும் கான்கிரீட் வீடுகள் கிடைக்காது. கிராமப்புற மக்களுக்கு
கிடைக்கும் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை கிடைக்காது. அரசு கல்வி
நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 7.5 சதவீத இட
ஒதுக்கீடும் கிடைக்காது. தமிழக அரசு பரிசீலனை செய்து, 18 கிராமங்களை
இணைப்பு செய்துள்ளதை விடுவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில்
குறிப்பிடப்
பட்டுள்ளது.
மேலும்
-
17 அடி உயரத்தில் பறந்த இண்டிகோ விமானத்தை மின்னல் தாக்கியது; அவசர தரையிறக்கம்
-
மீண்டும் பிளேக் பீதி? 'எல்லாம் வதந்தி' என்கிறது ரஷ்யா
-
8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்கிறார் டிரம்ப்: நோபல் பரிசுக்கு மீண்டும் குறி
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது: பதுங்கு குழி தகர்ப்பு; ஆயுதங்கள் பறிமுதல்
-
வட மாநில தொழிலாளர்களுக்கு எளிதாக புரிய ஹிந்தியில் தகவல் தருவதில் தவறு இல்லை: தொழில் துறையினர் கருத்து
-
ராகுல் சந்திப்பை தவிர்க்கும் விஜய்; பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பு