கிரானைட் வீரமணி மீதான வழக்கு: அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை
சென்னை: 'கிரானைட் வீரமணிக்கு எதிரான, பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பான விசாரணையை மறைக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை, சிறப்பு புலனாய்வு குழு அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
கிரானைட் வீரமணி தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி வாதாடியதாவது:
பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பான விசாரணையை, மறைக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்து வருகின்றனர். அனைத்து கோணங்களிலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கை வெளியுலகிற்கு கொண்டு வந்த பெருமை, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியையே சேரும். அவர் மட்டும் மேல் விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், இந்த விவகாரம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும்.
இதுவரை சிறப்பு புலனாய்வுக் குழு, நான்கு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மேலும் மூவர் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து, புகார் அளிக்க வேண்டும் என, காவல்துறை விரும்புகிறது. இந்த வழக்கு தொடர்பாக, ஊடகங்கள், கூடுதல் கவனத்துடன் செய்திகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார். நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
கருணாநிதிக்கு ரொம்ப நெருக்கம். அப்படியும் எப்படி தவறை விஞ்ஞானரீதியாக மறைக்க தெரியாமல் மாட்டிகிட்டான்?
இவர்களுக்கு தண்டனை பெற்றுதறுவதற்குள் அவர்களே இயற்கையா இறந்துவிடுவார்கள். அவ்வளவு காலதாமதம் ஆக்குவார்கள்.
சுட்டுக் கொல்வதற்கு கூலிப் படையை அனுப்புவர்.எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
It appears to me that the government lawyers are neither t effective nor competent in their legal arguments. Also, the SIT appointed to investigate Veeramanis notorious case is toothless. How can the police personnel investigate this heinous crime?
If Really True, Why Police Shielded All Involved incl Womaniser VIPs Earlier??
Arrest All incl Involved Police for Grave Shieldings& Failures
நமது நீதி வழங்கும் முறைகள் திருத்தப்பட்டு உடனுக்குடன் கடுமையான தண்டனைகள் அமுல்படுத்தும் நிலை வரவேண்டும்.
விசாரணை ஆரம்பம் பிறகு ஜாமீன் அதன் பிறகு ஆளும் கட்சியோடு இணக்கம் பிறகு வழக்கிலிருந்து விடுவிப்பு இது தான் நாட்டு மக்களின் தலை எழுத்தில் ஒன்று
இப்போ தானே ஆரம்பித்திருக்கிறது இனி ஒரு 50 வருடங்கள் ஆகும். வழக்கு இறுதியில் நீர்த்து போகும்.
ரேப்மணி செத்துடுவாரு. வழக்கு அம்போ. இவனுடைய காசை சுரண்டிய திருட்டு டோப்பா குடும்பத்துக்கு பெரிய ரிலீப்.
நீர்த்து போக வைத்துவிடுவார்கள்
இவரிடம் பணம் புடுங்கியவர்களை முக்கிய கழக களவாணிகளை பிடித்தால் போதும், அவர்கள் ஏற்கனவே அனைத்து கோணங்களிலும் குற்றவாளியின் குற்றங்களை விசாரித்து அதற்கு தகுந்த படி பணத்தை புடுங்கி இருப்பார்கள். அதை பாருங்கமேலும்
-
இன்று 9 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
வரும் தேர்தலில் தவெக மட்டுமே வெற்றி பெறும்: அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார் பேட்டி
-
3000 ஆண்டு பழமையான குதிரையின் எலும்புக்கூடு; எகிப்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் புதிய தகவல்கள்
-
தொடர் போராட்டம் எதிரொலி; டில்லியில் 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
இந்தியாவுக்கே திரும்பி வாங்க; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு