நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்கட்டும்; கோவிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி பதிவு

9

புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு நடத்தினார்.

இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: டில்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலில் இன்று வழிபாடு மேற்கொண்டேன். நாடு முழுவதும் உள்ள எனது சக குடிமக்களின் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்வாழ்வுக்காக ஸ்ரீ விநாயகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்தேன்.

தடைகளை நீக்கும் அந்த இறைவனின் அருளால் அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்கட்டும்; மேலும், நமது நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதற்கிடையே பிரதமர் மோடி 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு பெற்றதை துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் சமூக வலைதளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

Advertisement