ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியுமா? ஐகோர்ட் கேள்வி
சென்னை: ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியுமா? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தரப்பில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்தத் தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, சென்னை ஐகோர்ட் நீதிபதி லக்ஷ்மிநாராயணன் கூறியதாவது:
* நான் நீதிபதியாகி சொத்து விவரங்களை தாக்கல் செய்தபோது, என் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்டை நம்பித்தான் செய்தேன். விஜய்யும் தனது சொத்து விவரங்களை அவரது சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் மூலம் தாக்கல் செய்திருக்கலாம்.
* அதில் ரூ.20-30 லட்சம் அளவிலான ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அதை மட்டும் வைத்து, அவரது தேர்தல் செல்லாது என அறிவிக்க முடியுமா?
* ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியுமா?
* திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்த ஒருவர் ரூ.600 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், ரூ.20-30 லட்சம் விவரங்கள் விடுபட்டிருப்பது மட்டும் அவரது தேர்தல் வெற்றியை பாதிக்குமா?
இவ்வாறு மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஆடிட்டரை தவறு செய்ய விஜய் தூண்டவில்லை என கூறமுடியுமா ?
நீட்டிய இடத்தில கைநாட்டு வைப்பவர்கள் ஒரு மாநிலத்தை ஆளுவதொ , அல்லது ஒரு வழக்கில் தீர்ப்போ கொடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியுமா ? மெத்த படித்தவர்கள் சொன்னால் அதில் ஏதாவது பாமரமக்குளுக்கு புரியாமல் இருக்கும்.. நீதிமன்றங்களில் கொடுக்கப்படும் ப்ராமணபத்திரத்திலும் இத்தகைய தவறுகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா ?
வேட்பாளர், வாக்காளர் தகுதியில் குறைபாடு இருந்தால் மட்டும் தான் வெற்றியை பரிசீலனை செய்ய முடியும். 18 வயது பூர்த்தி இல்லை. இந்திய குடிமகன் இல்லை போன்ற குறை இல்லை. அவர் உழைப்பில் சொத்து சேர்த்து, பின் அரசியலுக்கு வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் வருமானம் தாக்கல் செய்து இருப்பார். அதில் வருமான வரி அதிகாரிகள் தணிக்கை செய்யும் போது, விடுபட்டு இருந்தால் வசூல் செய்வர். வெற்றிக்கு பின் வழக்கு அரசியல் காழ்ப்பு.
அன்புள்ள திராவிட அப்பா, இந்தத் தணிக்கையாளரைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்கள் ஆட்சியில், ஒரு தணிக்கையாளர் தவறு செய்ததால் அவருக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்.மேலும்
-
ஜான்டூயி மழலையர் பள்ளியில் 6வது சர்வதேச சதுரங்க போட்டி
-
பஸ் ஸ்டாண்டில் சி.சி.டி.வி., கேமரா பழுது: கண்காணிக்க முடியாமல் போலீஸ் திணறல்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பில்கிராம தொகுப்பு தயாரிக்கும் பணி: அக்.,15ல் துவங்குகிறது
-
ஒவ்வொரு எப்ஐஆரும் எனக்கு ஒரு பதக்கம்; இப்போது என்னிடம் 45 இருக்கு; இலக்கு 100 என்கிறார் ராகுல்!
-
துாய்மை பணியாளர்கள் தொடர் ஸ்டிரைக்: மூன்று நாட்களாக குப்பை வாங்காததால்பாதிப்பு
-
உயிர் காக்கும் உன்னத பெட்டகத்திற்கு தட்டுப்பாடு