ஜான்டூயி மழலையர் பள்ளியில் 6வது சர்வதேச சதுரங்க போட்டி

பண்ருட்டி: பண்ருட்டி ஜான்டூயி மழலையர் துவக்கப்பள்ளியில் 6வது சர்வதேச சதுரங்க செஸ் போட்டி நடந்தது. போட்டியை கிங் செஸ் அகாடமி ஏற்பாடு செய்திருந்தது. இதில் குஜராத், கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த 266 பேர் பங்கேற்றனர்.

போட்டியை பள்ளி இணை செயலர் நித்தின்ஜோஷ்வா துவக்கி வைத்தார். தொழிலதிபர்கள் அருள், ஜாகீர்உசேன் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் வீரதாஸ், இயக்குனர் எமர்சன்ராபின், இணை செயலர் நித்தின்ஜோஷ்வா, பள்ளி முதல்வர் வாலண்டினாலெஸ்லி, டாக்டர் ரத்தினம், செஸ் கழக தலைவர் ராஜாங்கம் தலைமையாசிரியர் சுமதி பரிசுகள் வழங்கினர்.

Advertisement