த.வெ.க., ஆதரவு கவுன்சிலர் மீது வழக்கு

மதுரை: மதுரை மாநகராட்சி 62வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன், சுயேச்சையாக வெற்றி பெற்று தி.மு.க.,வில் இணைந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இவர், அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். கடந்த ஆட்சியில் மோசடி புகார் அடிப்படையில் தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். கைதும் செய்யப்பட்டார். ஆட்சி மாற்றத்திற்கு பின் த.வெ.க.,வில் இணைந்தார்.

இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பெருமாள் என்பவர், ஜெயச்சந்திரனிடம் இடம் விற்பனைக்காக பிறரிடம் இருந்து வாங்கிக்கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட போது தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, கரிமேடு போலீசில் புகார் செய்தார். ஜாமினில் விடுவிக்கக்கூடிய பிரிவுகளின் கீழ் ஜெயச்சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement