துாய்மை விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

புதுச்சேரி: கலித்தீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலை கல்லுாரியில் ஸ்வச் பாரத் இந்தியா இயக்கம் சார்பில் துாய்மை விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் கதிர்வேல் தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தேசிய மாணவர் படையின் ஜூனியர் கமாண்டிங் ஆபீசர் அசோக், துணை அதிகாரி ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரியின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தரைப்படை பிரிவு மாணவர்கள், பொதுமக்களிடையே துாய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.

ஊர்வலம் கல்லுாரி வளாகத்தில் துவங்கி, மதகடிப்பட்டு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லுாரியை வந்தடைந்தது. தொடர்ந்து கல்லுாரி மாணவர்கள், என்.சி.சி., தரைப்படை பிரிவு மாணவர்கள், பேராசிரியர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.

Advertisement