முதல்வர் விஜய் வழக்கில் அக்.,14ல் தீர்ப்பு; ஒத்திவைத்தது ஐகோர்ட்

2

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், 53 715 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன், திமுக வேட்பாளர் சேகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதில், ரூ.30 கோடி சொத்து விபரங்களை பிரமாணப் பத்திரத்தில் மறைத்ததாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த ஏதுவாக, அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்கக்கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதி, ஆடிட்டர் செய்த தவறுக்காக, முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் விஜய்யின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பை அக்.,14ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பிரத்யேக வீடியோ!


விஜய் வெற்றி செல்லுமா? வரும் 14ம் தேதி தீர்ப்பளிக்கிறது ஐகோர்ட்; வழக்கின் முழு விவரம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனல் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
https://www.youtube.com/live/D9VzcSzlcH0?si=3RGMNynMvnb2KLEh

Advertisement