துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
சென்னை: சென்னைத்துறைமுக சுகாதார அமைப்பு, சென்னை துறைமுகம் மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நேற்று நடத்தியது.
முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ரத்த சோகை, எலும்புத் தேய்மானம், தோல் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
உடனடி ஹீமோகுளோபின் பரிசோதனை, எலும்புத் தேய்மானத்தை கண்டறியும் பரிசோதனை, மனநலம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. துறைமுக தலைவர் சச்சின் குர்வே, துறைமுக சுகாதார அதிகாரி குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement