சிறப்பான பயிற்சி பெற்றால் எல்லாரும் ஜெயிக்கலாம்; பிரக்ஞானந்தா ஊக்கம்

சென்னை: நல்லா பயிற்சி செய்யுங்க; உங்களுடைய பெஸ்ட்-ஐ கொடுங்க; எல்லாரும் ஜெயிக்கலாம் என செஸ் வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை முதல்வர் விஜய் வழங்கினார். உஸ்பெகிஸ்தானில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில், வெள்ளி பதக்கம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சம் முதல்வர் விஜய் வழங்கி கவரவித்தார்.

நிருபர்களிடம் பிரக்ஞானந்தா கூறியதாவது: ரொம்ப சந்தோசமாக இருக்கிறது, இதை பார்க்கும் போது நிறைய இளைய தலைமுறை யினர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்று ஊக்கத்தை தரும்; மற்ற விளையாட்டில் விளையாடி சாதித்தவர்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

நல்லா பயிற்சி செய்யுங்க; உங்களுடைய பெஸ்ட்-ஐ கொடுங்க; கண்டிப்பாக எல்லாரும் ஜெயிக்கலாம். நிறைய திட்டங்களை அரசு அறிவித்திருப்பது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

விளையாட்டுக்கு இன்னும் நிறைய அங்கீகாரம் கிடைப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அங்கீகாரம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்; புது திட்டங்கள் இன்னும் நிறைய வீரர்களை ஊக்கப்படுத்தும். இவ்வாறு பிரக்ஞானந்தா கூறினார்.

Advertisement