15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் மாநகராட்சி கமிஷனரை முற்றுகையிட்ட மக்கள்
சேலம்; சேலம் மாநகராட்சி, 55வது வார்டில் தாகூர் தெரு, குமரன் நகர், 1, 2, 3, அம்பாள் ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில், 15 நாட்களுக்கு ஒரு-முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதுகு-றித்து அப்பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகத்-திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், 50க்கும் மேற்-பட்டோர், நேற்று காலை, 11:00 மணிக்கு, காலி குடங்களுடன், கொண்டலாம்பட்டி மண்டல அலு-வலகத்துக்கு வந்தனர். தொடர்ந்து குடிநீர் வசதி கேட்டு, அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அப்போது அங்கு, மாநகராட்சி கமிஷனர் லலித் ஆதித்ய நீலம் வந்தார். அவரை முற்றுகையிட்ட மக்கள், 'எப்போது தண்ணீர் வரும்' என கேள்வி எழுப்பினர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, உடனே குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதேநேரம் அங்கு வந்த, தி.மு.க., கவுன்சிலர்கள் தனலட்சுமி, முருகன், சீனிவாசன் ஆகியோரும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோகிப்-பதில் தாமதம் ஏற்படுவதால், அதை சரிசெய்ய கோரிக்கை வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக, கமிஷனர் தெரிவித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். மதியம், 55வது வார்டு பகுதிகளில் வாகனம் மூலம் குடிநீர் வழங்-கப்பட்டது
மேலும்
-
அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு
-
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
-
அரசு கல்லூரியில் வாக்காளர் பதிவு விழிப்புணர்வு முகாம்
-
குறைக்கப்பட்ட கமிஷனை வழங்கக்கோரி எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
-
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வீசப்பட்ட பெயர் பலகை
-
காரிமங்கலத்தில் தொடர் திருட்டு நடவடிக்கையில் போலீசார் மெத்தனம்