தேர்தல் கமிஷனர் படத்தை எரிக்க முயற்சி காங்., - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

ஆத்துார்; மத்திய அரசை கண்டித்து, காங்., சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை, 5:30 மணிக்கு நடந்தது. மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமை வகித்தார்.

அதில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்-பினர். தொடர்ந்து, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் புகைப்படம் மற்றும் கறுப்பு மையிட்ட பேனரை, தீயிட்டு எரிக்க முயன்றனர். அங்கிருந்த, ஆத்துார் டவுன் போலீசார், அவர்-களை தடுத்து நிறுத்தினர். இதில் காங்., கட்சி-யினர், போலீசார் இடையே சிறிது நேரம் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போலீசார், படம், பேனரை கைப்பற்றினர்.பின் கட்சியினர், சாலை மறியலில் ஈடுபட்ட-போது, 'ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெற்ற நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்ச-ரித்தனர். இதனால் மறியலை கைவிட்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement