வேலைக்கு திரும்பிய துாய்மை பணியாளர்கள்

மேட்டூர்; மேட்டூர் நகராட்சியில், 130 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளனர். அவர்கள், ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 5 முதல், நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு-பட்டனர். தொடர்ந்து, 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள், நேற்று காலை, 7:00 மணிக்கு, மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் முன், சாலை மறியலில் ஈடுபட திட்டமிட்டனர்.

இதனால் நகராட்சி கமிஷனர் சபாநாயகம் பேச்சு நடத்தி, 'ஒப்பந்ததாரரிடம் கோரிக்கை குறித்து பேசியுள்ளோம். அவர் வரும், 15ல் உங்களிடம் பேச்சு நடத்துவதாக கூறியுள்ளார். அதுவரை உங்-களின் தற்காலிக கோரிக்கையான கையுறை, குப்பை அகற்றும் கருவி வழங்கப்படும்' என உறுதி அளித்தார். தொடர்ந்து துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.அதேபோல் பணி நிரந்தரம், கூலி உயர்வு உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 5 முதல், ஆத்துார் நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், டிரைவர்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்-டனர். அவர்களிடம், நகராட்சி அலுவலகம் சார்பில் பேச்சு நடத்தப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பணியாளர்கள், நேற்று பணிக்கு திரும்-பினர். இதனால், 3 நாளாக அள்ளப்படாமல் குவிந்து கிடந்த குப்பையை சேகரித்து எடுத்துச்-சென்றனர்.

Advertisement