தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி
சேலம்; மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் இளம் பகவத் தொடங்கி வைத்து பேசுகையில், ''ஊட்டச்சத்தான உணவு, உடல் நலம், தன் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 9வது தேசிய ஊட்டச்-சத்து மாதத்தை ஒட்டி, நடப்பாண்டு, 'நமது அங்-கன்வாடி நமது பொறுப்பு' எனும் கருத்தை மைய-மாக கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்-பட்டது,'' என்றார்.முன்னதாக, 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி, ஊட்டச்சத்து பணியாளர்கள், தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement