இடைத்தேர்தலில் கடும் பின்னடைவு; இருதொகுதியிலும் கம்யூனிஸ்ட் கதை கந்தல்
-நமது நிருபர்-
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், எதிர்பார்த்த படியே டிபாசிட் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.
விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கி காமெடி செய்தனர்.
மதுராந்தகத்தில் மா.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தியும், தாராபுரத்தில் இந்திய கம்யூ கட்சி சார்பில் லட்சுமணன் போட்டியிட்டனர். மக்கள் ஆதரவு இல்லாத அவர்களுக்கு, டிபாசிட் கூட கிடைக்காது என்று தான் பலரும் எதிர்பார்த்தனர். அதன்படியே அவர்களுக்கு டிபாசிட் கிடைக்காது என்று உறுதியாகியுள்ளது.
தற்போது, 8 சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுகந்தி 766 ஓட்டுகளும், 12 சுற்று எண்ணிக்கை முடிவில், தாராபுரத்தில் கம்யூ., வேட்பாளர் லட்சுமணன் 640 ஓட்டும் மட்டுமே பெற்றுள்ளனர்.
தொகுதிக்கு ஆயிரம் ஓட்டு கூட இல்லாமல், ஏதேனும் ஒரு கூட்டணியில் சேர்ந்து கொண்டு எம்எல்ஏ., எம்.பி., பதவிகளை பெற்றுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்மையான பலம், இப்போது தான் மக்கள் மத்தியில் அம்பலமாகி உள்ளது' என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.
மேலும்
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது
-
போராடும் மாணவர்களை கையாள முழுசுதந்திரம் வழங்க முடியாது; டில்லி போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம்
-
இந்திய இணைய உலகை கைப்பற்ற அமெரிக்கா சதி: ‛‛மாஸ்கை'' கழற்றி கொடூர முகம் காட்டும் மஸ்க்
-
தவெக தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
-
நானா படேகரின் இறுதிச்சடங்கை இரவில் நடத்தியது ஏன்? மகன் சொன்ன காரணம்
-
சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க உறுதியேற்போம்; முதல்வர் விஜய்