ஜனாதிபதியுடன் ராகுல் தலைமையில் இண்டி கூட்டணி எம்பிக்கள் சந்திப்பு

3

புதுடில்லி:

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக இண்டி கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அக்டோபர் 7 ல் தேர்தல் கமிஷன் அலுவலம் நோக்கி சென்ற ராகுல் உள்ளிட்ட எம்பிக்களை போலீசார் கைது செய்தனர். 8 ம் தேதி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி சென்றவர்களை தடுத்து கைது செய்தனர்.நேற்று, காந்தி ஸ்மிருதியில் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இன்று இண்டி கூட்டணி எம்பிக்கள் பார்லிமென்ட் வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இதன் பிறகு ராகுல், மம்தா பானர்ஜி உள்ளிட்ட10 எம்பிக்கள் ஜனாதிபதி இல்லம் நோக்கி பேரணியாக சென்றனர்.

ஆனால் மற்ற எம்பிக்கள் கர்தவயா பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி திரவுபதிமுர்முவை சந்தித்த பிறகு ராகுல் கூறியதாவது: குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மறுக்கவில்லை. ஆனால், ஆதாரம் கேட்டு உள்ளார். தேர்தல் எப்படி திருடப்பட்டது என்பது குறித்து ஆதாரம் உள்ளது.அது நாட்டும க்களுக்குதெரியும் என்றார்.

எங்கள் மனுவை விசாரணை செய்வதாக ஜனாதிபதி கூறியதை நேர்மறையான அணுகுமுறையாக பார்க்கிறோம். ஆதாரம் தேவை எனக்கூறினார். ஜனநாயகத்தை பாதுகாக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தும்படி கூறினோம்.

Advertisement