எம்ஜிஆராக, ஜெயலலிதாவாக விஜயை அதிமுகவினர் பார்க்கின்றனர்: அமைச்சர் ஆதவ் கருத்து
சென்னை: அ.தி.மு.க.,வின் 65 சதவீத ஓட்டுகள், த.வெ.க.,வுக்கு மாறியுள்ளதாக, த.வெ.க.,வை சேர்ந்த அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.
அவரது பேட்டி: சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், தி.மு.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்று, துரோகம் செய்தவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ். எனவே, 'இனிமேல், தி.மு.க.,வை எதிர்க்க, த.வெ.க.,வால் மட்டுமே முடியும். இரட்டை இலையும், விசிலும் ஒன்று தான்' என பிரசாரம் செய்தோம்; அதற்கு பலன் கிடைத்துள்ளது.
இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வின் 65 சதவீத ஓட்டுகள் த.வெ.க.,வுக்கு மாறியுள்ளன. அக்கட்சியின், 70 சதவீத ஒன்றிய செயலர்கள், கடந்த 10 நாட்களாக, எங்களை தொடர்பு கொண்டு வருகின்றனர். விஜயை, எம்.ஜி.ஆராக, ஜெயலலிதாவாக அ.தி.மு.க.,வினர் பார்க்கின்றனர்.
எஸ்,ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் அறிவித்தாலும், மாநில அரசு ஊழியர்களால் தான், வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்கவோ, சேர்க்கவோ முடியும்.
சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., கட்டுப்பாட்டில் இருந்த அரசு ஊழியர்கள் தான், பெயர்களை சேர்த்தனர்; நீக்கினர். யாரெல்லாம் நீக்கப்பட்டனர் என்பது, தி.மு.க., மாவட்ட, ஒன்றிய, கிளை செயலர்களுக்கு தெரியும்.
எனவே, எஸ்.ஐ.ஆரால் தி.மு.க., தோற்றது என்று சொல்வது முட்டாள்தனம். எஸ்.ஐ.ஆர்., இல்லாமல் இருந்திருந்தால், 160 தொகுதிகளில் த.வெ.க., வெற்றி பெற்றிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, “அடுத்த 15 தொகுதி இடைத்தேர்தலிலும் வெல்வோம்,” என ஆதவ், வாய் தவறி கூறினார். 5 தொகுதிகளுக்கு தானே, இடைத்தேர்தல் என கேட்டபோது, “தி.மு.க.,வுடன் பழனிசாமி சேர்வதால், அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
அந்தந்த எம்.எல்.ஏ.,வின் விருப்பம். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தி.மு.க.,வை அழிக்க வந்தவர். தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள அதிருப்தி விரைவில் வெளிவரும்,'' என, கூறினார்.
மேலும்
-
கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
-
த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
-
ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
-
கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயன், அவர் மகள் மீது வழக்கு பாய்கிறது!: ஐகோர்ட் உத்தரவு
-
இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் டிபாசிட் பறி கொடுத்த கம்யூ., கட்சிகள்
-
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2வது டி - 20 கிரிக்கெட்: இந்திய அணி 249 ரன் குவிப்பு