கள்ள நோட்டு வழக்கில் தப்பியவர் 14 ஆண்டுகளுக்கு பின் கைது
சென்னை: கள்ள நோட்டு வழக்கில் கைதாகி ஜாமினில் சென்ற நபரை, 14 ஆண்டுகளுக்கு பின் சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில், 2012, ஜன., 18ல், பழக்கடை ஒன்றில் 1,000 ரூபாய் மதிப்புள்ள 19 கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற போது முகமது இஸ்மாயில் ஷேக் என்பவர் சிக்கினார். அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து 1.71 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து அதே ஆண்டு ஜாமினில் வந்தவர் தலைமறைவானார். 14 ஆண்டாக போலீசில் சிக்காமல் இருந்த முகமது இஸ்மாயில் ஷேக்கை, நேற்று சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement