வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி: காரைக்கால் டிராவல்ஸ் உரிமையாளர் மீது வழக்கு
காரைக்கால்: காரைக்காலில் கணவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, மா ணிக்கப்பங்கு, பெருமாள்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர் மனைவி புனிதவதி, 38. மீன்பிடித் தொழில் செய்து வரும் கணவரின் வருமானம் குடும்பத்திற்கு போதிய அளவு இல்லாததால், அவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப புனிதவதி முடிவு செய்தார்.
இதற்காக கடந்த 2024ம் ஆண்டு பிப்., 9ம் தேதி காரைக்கால் பி.கே., சாலையில் உள்ள 'ஜே.எப்.டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகினார். அப்போது, நிறுவன உரிமையாளர் ஜன்னத்துல் பிர்தௌஸ், புனிதவதியின் கணவர் பாஸ்கருக்கு போலாந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4.50 லட்சம் கேட்டார்.
இதை நம்பிய புனிதவதி பல தவணைகளாக ரூ.3.30 லட்சத்தை நிறுவன உரிமையாளர் ஜன்னத்துல் பிர்தெளஸிடம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்று கொண்ட ஜன்னத்துல் பிர்தெளஸ், வெளிநாட்டு வேலை தொடர்பாக எந்தவித ஏற்பாடுகளையும் செய் யாமல் காலம் கடத்தி வந்தார். இதையடுத்து, புனிதவதி கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டபோது, ஜன்னத்துல் பிர்தௌஸ் மற்றும் அவரது கணவர் அசாருதீன் ஆகியோர் இணைந்து புனிதவதியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதேபோல், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக திருவாரூர் பகுதியை சேர்ந்த ரபியுதீன் என்பவரிடம் ரூ.4.64 லட்சமும், அசினா பர்வின் என்பவரிடம் ரூ.3.50 லட்சமும் வாங்கி ஜன்னத்துல் பிர்தெளஸ் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து புனிதவதி புகாரின் பேரில், டிராவல்ஸ் உரிமையாளர் ஜன்னத்துல் பிர்தௌஸ் மற்றும் அவரது கணவர் அசாருதீன் ஆகியோர் மீது காரைக்கால் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.