த.வெ.க., கொண்டாட்டம்

அன்னுார்: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில், த.வெ.க., வெற்றி பெற்றதை, கட்சியினர் கொண்டாடினர்.

அன்னுார், கைகாட்டி, கரியாம்பாளையம், பிள்ளையப்பம்பாளையம், பொன்னே கவுண்டன்புதுார், கணேசபுரம் உள்பட எட்டு இடங்களில், பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முதல்வர் விஜயை வாழ்த்தி கோஷம் எழுப்பப்பட்டது.

நகரச் செயலாளர் கிருஷ்ணதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித், அன்பழகன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* சூலுார் எம்.எல்.ஏ., அலுவலகம் முன், எம்.எல்.ஏ., சுகுமார் தலைமையில் கட்சியினர், பட்டாசு வெடித்தும், மக்களுக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். சூலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட த.வெ.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement