ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் அதிகரித்த காய்கறிகள் விலை
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
இந்த மார்க்கெட்டிற்கு தக்காளி, வெங்காயம், முருங்கை, வெண்டைக்காய், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மழை இன்றி கிணறுகள், போர்வெல்களில் தண்ணீர் குறைந்ததால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு வாங்கியதால் காய்கறிகள் விலை நேற்று ஏறுமுகமாக இருந்தது.
கிலோ ரூ.42க்கு விற்ற கரும்பு முருங்கை ரூ.45க்கும், ரூ.37க்கு விற்ற செடிமுருங்கை ரூ.40க்கும், ரூ.32க்கு விற்ற மரம் முருங்கை ரூ.35க்கும் விற்பனையானது.
இதேபோல் கிலோ ரூ.18க்கு விற்ற வெண்டை ரூ.21க்கும், ரூ.18-க்கு விற்ற பீட்ரூட் ரூ.21க்கும் விற்றது.
பல காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் வரத்து குறையும் என்பதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் வெங்காய தரகு மண்டிக்கு திருச்சி துறையூரில் இருந்து வரத்து அதிகமாக இருக்கும். துறையூரில் பருவமழை இன்மையால் நடவு பணிகளை விவசாயிகள் இன்னும் துவங்க வில்லை. உள்ளூர் வரத்தும் குறைந்தது.
இதனால் கோவை, திருப்பூர், நாமக்கல், தேனி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாரி, சின்ன வெங்காயம் தினமும் 400 டன்னுக்கு அதிகமாக இந்த மண்டிக்கு விற்பனைக்கு வருகிறது.
கடந்த வாரம் சின்ன வெங்காயம் சன்னரகம் கிலோ ரூ.50க்கும், முதல்தர சின்ன வெங்காயம் ரூ.90க்கும் விற்பனையானது. நேற்று ரூ.10 அதிகரித்து சன்னரகம் ரூ.60க்கும், முதல்தரம் ரூ.100க்கும் விற்பனையானது.
மேலும்
-
சாத்துாரில் மெயின் ரோட்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு
-
சேதமடைந்த போடி ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்: 4 ஆண்டாக கட்டுமான பணி துவங்காத அவலம்
-
சுருளி அருவி பூத நாராயணர் கோயில் திருப்பணிகள் துவங்குவதில் இழுபறி
-
மானாமதுரை கோயிலில் நாளை நவராத்திரி விழா
-
நிலக்கடலை விலை உயர்வு: கூலி தொழிலாளர்கள் ஏமாற்றம்
-
குன்றத்து மலையில் வேலுக்கு அபிஷேகம்