பழநியில் நவராத்திரி விழா நாளை துவக்கம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நாளை (அக்.,11) கோலாகலமாக துவங்க உள்ளது.

இதையொட்டி தங்கரத புறப்பாடு நாளை முதல் அக்.,20 வரை நிகழாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் நவராத்திரி விழா நாளை காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.

பழநி முருகன் கோயிலில் உச்சிக்கால பூஜையில் காப்பு கட்டுதல் நடக்கிறது.

விழா நாட்களில் மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங் காரம், தீபாராதனைகள் நடக்கிறது.

அதேபோல் பக்தி இசை, சொற் பொழிவு, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு நாளை முதல் அக்.20., வரை பத்து நாட்களுக்கு முருகன் கோயிலில் தங்கரத புறப்பாடு நிகழாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement