மானாமதுரை கோயிலில் நாளை நவராத்திரி விழா
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் நாளை நவராத்திரி விழா துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழா நாளை 11ம் தேதி துவங்குகிறது. விழா நாட்களின் போது ஆனந்தவல்லி அம்மன் ராஜராஜேஸ்வரி, மகிஷாசூரமர்த்தினி, காமாட்சி, சிவ பூஜை செய்தல் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
விழாவை முன்னிட்டு கோயிலின் உள் மற்றும் வெளி வளாகங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோயில் வளாகத்தில் கொலு அமைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement