ஏலச்சீட்டு நடத்தியவர் மனைவியுடன் மாயம்
மேட்டூர்; மேட்டூர், தங்மாபுரிபட்டணம், பழைய அஞ்சல் நிலைய வீதியை சேர்ந்தவர் சேகர், 51. இவரது மனைவி புவனா, 38. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். சேகர், ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழில் செய்தார்.
கடந்த, 6 மதியம், சேகர், புவனாவுடன், வீட்டை விட்டு வெளியே சென்றார். பின் இருவரும் திரும்பி வரவில்லை. மறுநாள் இரவு, சேகர், விருதாசம்பட்டியில் வசிக்கும் புவனாவின் சகோதரர் சந்திரனிடம் பேசினார். அப்போது, 'வீட்டில் இருக்கும் எங்கள் குழந்தைகளை உங்கள் குழந்தைகளை போல் பார்த்துக்கொள்ளுங்கள்' என கூறிவிட்டு, மொபைல் இணைப்பை துண்டித்தார்.சந்திரன், பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர், நேற்று அளித்த புகார்படி, கருமலைக்கூடல் போலீசார், தம்பதியை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement