அரசு சட்ட கல்லுாரியில் ஜி.எஸ்.டி., பயிலரங்கம்

சேலம்: சேலம் அரசு சட்ட கல்லுாரி யில், 'இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் டிஜிட்டல் வரி விதிப்பு, சமகால வளர்ச்சிகளும் சவால்களும்' தலைப்பில் பயிலரங்கம் நடந்தது. முதல்வர் துர்காலட்சுமி தலைமை வகித்தார். சேலம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிருஷ்ண பிரியா, தொடக்க
உரையாற்றினார்.

தொடர்ந்து நடந்த, முதல் தொழில்நுட்ப அமர்வில், சேலம் கோட்ட மாநில வரிகள் நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனர் வீரேசலிங்கம், ஜி.எஸ்.டி., வரி அமலாக்கம், புலனாய்வு, நடைமுறை சார்ந்த முன்னேற்றங்கள் குறித்து பேசினார். ஜெயக்குமார், ஜி.எஸ்.டி., 2026 தொடர்பான அண்மைக்கால மாற்றங்கள், வரி விதிமுறைகளுக்கு இணங்குதல் மற்றும் வரி தொடர்பான வழக்குகள் குறித்து விளக்கம் அளித்தார். அதேபோல் ரங்கராஜன், சகுந்தலா, வேணுகோபால் ஆகியோர், 2026ம் ஆண்டின் வரிவிதிப்பு தொடர்பான புது சட்டங்கள், சவால்கள் குறித்து பேசினர். நிறைவு விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி பேசினார். சிவதாஸ் உள்ளிட்ட பேராசிரியர்கள், முதுகலை சட்ட
மாணவர்கள், இறுதி ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement