பெண்களை தாக்கிய தாய், மகனுக்கு 'காப்பு'
சேலம்; சேலம், கருப்பூர் அருகே மூங்கில்பாடியை சேர்ந்த, ராமமூர்த்தி மனைவி பிரீத்தி, 23. இவரும், அதே பகுதியை சேர்ந்த மேனகா என்பவரும் தோழிகள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு, சேலம், 5 ரோடில் நின்றிருந்தனர்.
அப்போது மேனகா, வீட்டுக்கு தகவல் தெரிவிக்க, பிரீத்தி மொபைல் போனை வாங்கி, பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, சித்தனுார் காட்டுவளவை சேர்ந்த ராஜலட்சுமி, 35, அவரது மகன் கிேஷார், 19, வந்தனர். பின் கிேஷார், 'என் தந்தை வாட்ஸாப் எண்ணுக்கு, எதற்காக உன் புகைப்படத்தை அனுப்பினாய்' என கேட்டு மேனகாவிடம் தகராறில் ஈடுபட்டு, வயிற்றில் காலால் எட்டி உதைத்தார். பிரீத்தியின் மொபைல் போனை, ராஜலட்சுமி பிடுங்கி உடைத்துள்ளார். தொடர்ந்து அவர்கள், பிரீத்தி, மேனகாவை தாக்கினர். இதுகுறித்து பிரீத்தி புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, ராஜலட்சுமி, கிேஷாரை கைது செய்தனர்.