அன்புமணி பிறந்தநாள் அன்னதானம் வழங்கல்

ஓமலுார்: பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்தநாளை ஒட்டி, பா.ம.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் கட்சியினர், நேற்று மதியம், சின்னதிருப்பதி காருவள்ளி வெங்கட்ரமணர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து மாநில இளைஞரணி செயலர் அண்ணாமலை, 400 பேருக்கு அன்னதானம் வழங்குவதை தொடங்கி வைத்தார். மேலும் ஓமலுார், பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சியினர், கேக் வெட்டி கொண்டாடினர்.

அதேபோல் சேலம் தெற்கு மாவட்டம் சார்பில், இடைப்பாடியில் நகர செயலர் சண்முகம் தலைமையில் கட்சியினர், மக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து தென்னை, மா, வேம்பு, கொய்யா என, 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை, மாவட்ட செயலர் செல்வகுமார் வழங்கினார். நகர துணை செயலர் வைத்தி, முன்னாள் நகர செயலர் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் இடைப்பாடி போக்குவரத்து கழக பணிமனை முன், பா.ம.க., தொழிற்சங்கத்தினர் கொண்டாடினர்.

Advertisement