நாலெட்ஜ் தொழில்நுட்ப கல்லுாரியில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம்: உலக மனநல தினத்தை ஒட்டி, சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்ப
கல்லுாரியில் மனநலம் மற்றும் உணர்வுசார் நல்வாழ்வு மன்றம் சார்பில், 'உணர்ச்சி ஆளுமை' தலைப்பில், மன நல விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

சென்னை, கலாம் உலக சாதனை அமைப்பு உடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக, மருத்துவ உளவியலாளர்கள் பாபு ரங்கராஜன், ரோஜா ரமணி, பயனுள்ள ஆலோசனை, வழிகாட்டுதல்களை, மாணவர்களுக்கு வழங்கினர்.இதில் தமிழகம் முழுதும் உள்ள மாணவர்கள் பங்கேற்க ஆன்லைன், யு - டியூப் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதனால், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து, முதல்வர் விசாக வேல் கூறுகையில், ''இளம் தலைமுறையின் மனநலம், உணர்வுசார் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது,'' என்றார்.
நாலெட்ஜ் தொழில்நுட்ப கல்லுாரி நிறுவனர் சீனிவாசன், அறக்கட்டளை செயலர் குமார், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர், வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் கல்லுாரி இயக்குனர்கள், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், விழாவை சிறப்பித்தனர்.

Advertisement