தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தலைமை ஆசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் யசோதா, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு அவற்றின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றி ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் பிரபாவதி, சட்ட நுணுக்கத்துடன் எடுத்துரைத்தார். மேலும் மாணவர்கள் கேட்ட வினாக்களுக்கு உரிய விளக்கம் அளித்தார்.இதில், வட்ட சட்டப் பணிகள் குழு சிவசெல்வம், ஆசிரியர்கள் செந்தில், சரவணன், பி.எட்., பயிற்சி ஆசிரியைகள் மற்றும்
ஜே.ஆர்.சி., - என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement