கனிமங்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
பாகலுார்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே தேவீரப்பள்ளியில் உள்ள சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டில், பாலிகானப்பள்ளி வி.ஏ.ஓ., பிரபாகரன் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த இரு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது, தமிழக அரசின் தடையை மீறி தலா, 4 யூனிட் எம்.சாண்ட் மற்றும் ஜல்லியை, பேரண்டப்பள்ளியிலிருந்து, கர்நாடகாவிற்கு கடத்தி செல்வது தெரிந்தது. இரு லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாகலுார் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., பிரபாகரன் புகார்படி, லாரிகளின் டிரைவர், உரிமையாளர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement