முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பூத்து குலுங்கிய பிரம்மகமலம் பூ
போச்சம்பள்ளி; முன்னாள் ராணுவ வீரர் வீட்டில், பூத்து குலுங்கிய பிரம்ம கமலம் பூக்களை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
போச்சம்பள்ளியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மகேஸ்வரன், 50. இவர் தன் வீட்டில், மூன்று பிரம்மகமலம் செடிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரு செடிகளில், 37 பிரம்மகமலம் பூக்கள் பூத்து குலுங்கின. ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம், நள்ளிரவில் பூத்து, ஓரிரு நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை
கொண்டது.
ஜூலை முதல் அக்., வரை இரவில் பூக்கும் வித்தியாசமான மலர், இமயமலையில் உள்ள பூக்கள் வகையை சேர்ந்தது. மருத்துவ குணமும், தெய்வீக தன்மையும் வாய்ந்த அதிசய மலரை, அது மலரும் நேரத்தில் கண்டு தரிசித்தால், நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், மகேஸ்வரன் வீட்டிலிருந்த செடிகளில் பூத்து குலுங்கிய பிரம்ம கமல பூக்கள் முன், பெண்கள் கோலமிட்டு விளக்கேற்றி வழிபட்டனர். பிரம்ம கமலம் பூக்கள் பூத்துள்ளதை அப்பகுதி மக்கள், குழந்தைகள் ஆர்வமுடன் பார்த்து
சென்றனர்.
மேலும்
-
வனவிலங்குப் பூங்காவில் புலி தாக்கியதில் ஒருவர் பலி
-
எப் 35 போர் விமானங்களின் அருகில் கூட விடுவதில்லை; அமெரிக்க தளபதியிடம் நேருக்கு நேர் சொன்னார் இந்திய தளபதி
-
சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
ஓராண்டு காலம் அமைதிக்கு இடையூறு செய்யக்கூடாது; கரப்பான் கட்சியினருக்கு கோர்ட் நிபந்தனை
-
ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது: மைக்ரோசாப்ட் சிஇஓ அறிவுறுத்தல்
-
சவுதியின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதுணையாக நிற்கிறோம்: ஹவுதி தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்