டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் விளம்பரங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
புதுடில்லி: டாக்டர்களின் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகளில் திருத்தம் கொண்டு வர மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
நம் நாட்டில், மருந்துகள், அழகு சாதனப் பொருட்களை இறக்குமதி செய்தல், தயாரித்தல், வினியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை, மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகள், 1945ன் கீழ் முறைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த விதியில் உள்ள அட்டவணை, 'ஹெச்'ல் டாக்டர்கள் பரிந்துரை சீட்டுடன் விற்கப்பட வேண்டிய மருந்துகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், அட்டவணை, 'ஹெச் 1'ல், 'ஆன்டிபயாடிக்' மருந்துகள், காசநோய் மருந்துகளின் பட்டியல் மற்றும் அவற்றை விற்பனை செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அட்டவணை, 'எக்ஸ்'ல் போதை மற்றும் மனநல மருந்துகளின் பட்டியலும், அதற்கான கட்டுப்பாடுகளும் உள்ளன.
இந்த அட்டவணைகளில் இடம்பெற்றுள்ள மருந்துகளை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசின் முன் அனுமதியின்றி விளம்பரப்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மருந்துகளை விற்பனை செய்யும் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை.
இந்நிலையில், அவர்களுக்கும் இந்தக் கட்டுப்பாட்டை விதிக்கும் வகையில், மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகள், 1945ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த விதியின் 65வது பிரிவில், துணைப் பிரிவை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு திருத்த அறிக்கையை கடந்த மாதம் 28ம் தேதி சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.
கடந்த: ல் நடந்த மருந்துகள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் 93-வது கூட்டத்தில், மருந்து விற்பனை மற்றும் விநியோக உரிமம் பெற்றவர்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் மூலம், 'ஹெச், ஹெச் 1, எக்ஸ்' ஆகிய அட்டவணைகளில் உள்ள மருந்துகளை விளம்பரம் செய்ய, மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை உரிமம் வைத்திருப்பவர்களும் மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
மருத்துவக் கண்காணிப்பின்றி மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதும், அனுமதியற்ற விளம்பரங்களை தடுப்பதும் இந்தத் திருத்தத்தின் நோக்கம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வரைவு திருத்தம் குறித்து மருந்து துறையினர், பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைத் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பெறப்படும் கருத்துகளைப் பரிசீலித்த பின், திருத்தத்தை இறுதி செய்வது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்.
வரவேற்க வேண்டியது. மருத்துவர்களின் கையெழுத்து புரியும்படி ப்ரெஷகிரிபிஷனில் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். குறைந்த பட்சம் கேப்பிடல் லெட்டரில் இருக்க வேண்டும். சிலர் கையெழுத்து கோழி கிறுக்கலை விட மோசமாய் உள்ளது.
மருந்து விவரங்களை பிரிண்ட் செய்து கொடுக்கிறார்கள் .மேலும்
-
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது; வெளியுறவுத்துறை அமைச்சகம்
-
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.13 கோடிக்கு வர்த்தகம்
-
20 சதவீதம் போனஸ்: எல்.பி.எப்., கோரிக்கை
-
கோவில் அருகே குப்பைகளை கொட்டுவதால் அவதி
-
உளுந்துார்பேட்டை ஏரியில் நீர் நாய்
-
10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சவேரியார்பட்டினம் ரோடு: மக்கள் அவதி