உளுந்துார்பேட்டை ஏரியில் நீர் நாய்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ஏரியில் அரியவகை நீர் நாய் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்துார்பேட்டை, தாலுகா நகர் பெரிய ஏரியில் அரிய வகை நீர் நாய் ஒன்று தென்பட்டது. இந்த நீர் நாய் ஏரியில் உள்ள ஆமை, மீன்களை லாவமாக வேட்டையாடி உணவாக்கி கொள்கிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் நீர் நாயை பார்க்க குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து உளுந்துார்பேட்டை வனத்துறை வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வன அலுவலர்கள் அங்கு விரைந்தனர்.

இது குறித்து வன அலுவலர் கோகுல் கூறுகையில், இந்த வகை நீர் நாய் நல்ல நீர், உப்பு நீரில் என இருவகையில் வாழக்கூடியது. ஆற்றுப்பகுதி வழியாக ஏரிப்பகுதிக்கும். மற்றொரு ஏரிக்கும் சென்று வாழும் இந்த வகை நீர் நாய் மீன்களை உண்டு பதுங்கிக் கொள்ளும். இவற்றைப் பிடித்தால் நீர்நாய் உயிரிழக்க வாய்ப்பு அதிகம். இதனால் அதன் போக்கிலேயே விட்டு விட வேண்டும்’ என்றார்.

Advertisement