கோவில் அருகே குப்பைகளை கொட்டுவதால் அவதி
கள்ளக்குறிச்சி: சிவன் கோவில் அருகே சாலையில் குப்பைகளை கொட்டி செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி, சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.
இந்த கோவில் சுற்றுச்சுவர் பகுதியில், சாலையிலேயே, அந்த பகுதி கடைக்காரர்கள், குடியிருப்புவாசிகள் குப்பையை குவிக்கின்றனர்.
நகராட்சியின் ஒப்பந்த துாய்மை பணியாளர்களும் அங்கு தான் குப்பையை மூடையாக கட்டி போடுகின்றனர்.
எந்நேரமும் அப்பகுதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. காற்றில் அங்கு சேர்த்து வைக்கப்படும் பாலித்தீன் பைகள் பறந்து சாலையில் பரவி கோயிலுக்கு வரும் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் கோவில் அருகே சாலையில், குப்பைகளை கொட்டும் கடைக்காரர்கள் உள்ளிட்டோ் மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.