உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.13 கோடிக்கு வர்த்தகம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி உழவர் சந்தையில், விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்துகின்றனர். இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும், விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் உழவர் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த மாதம், 2 கோடியே, 13 லட்சத்து, 68 ஆயிரத்து, 565 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த மாதம், நாளொன்றுக்கு, 7 லட்சத்து, 12 ஆயிரத்து, 285 ரூபாய் மதிப்புள்ள, 14,423 கிலோ காய்கறிகள் வந்தன. தினமும் சராசரியாக, 59 விவசாயிகள், 2,884 நுகர்வோர்கள் பயன்பெற்றனர்.
கடந்த மாதம் மொத்தம், 432.7 மெட்ரிக் டன் காய்கறி வரத்து இருந்தது. மொத்த விற்பனை மதிப்பு, இரண்டு கோடியே, 13 லட்சத்து, 68 ஆயிரத்து, 565 ரூபாயாகும். 1,787 விவசாயிகள்; 86,541 நுகர்வோர்கள் பயனடைந்தனர்,’ என்றனர்.
மேலும்
-
அபிராமம் சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி: போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்தக் கோரிக்கை
-
பருவமழை முன்னெச்சரிக்கை புயல் காப்பகங்கள் தயார் நிலை: இரவு பணியாளர் நியமனம்
-
திருப்பரங்குன்றம் மலை மேல் திருவிழாவில் சமைக்கும் பிரச்னைக்கு பா.ஜ., காரணம்: அமைச்சர் நிர்மல்குமார் சாடல்
-
வயதை வென்ற கால்கள் வியக்க வைத்த வேகம்
-
திருப்பூரின் உள்நாட்டுச் சந்தையான காதர்பேட்டை காத்திருக்கிறது!
-
ரூ.43 கோடி கடத்தல் போதைபொருள் பறிமுதல்; கடத்தல்காரர்கள் 2 பேர் கைது