20 சதவீதம் போனஸ்: எல்.பி.எப்., கோரிக்கை

வால்பாறை: வால்பாறை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என, எல்.பி.எப்., தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் (எல்.பி.எப்.,) தேசிய பொதுசெயலாளர் வினோத்குமார், ஆனைமலை தோட்ட அதிபர் சங்க தலைவருக்கு அனுப்பியுள்ள மனு:

வால்பாறை மலைப்பகுதியில் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் கொட்டும் மழையிலும், வெயிலிலும், வனவிலங்குகளுக்கு மத்தியிலும் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸ், 20 சதவீதம் வழங்க வேண்டும்.

பண்டிகைக்கு முன்பாகவே போனஸ் குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பண்டிகை கால முன் பணம், போனஸ் உடன் சேர்த்து வழங்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement