எப் 35 போர் விமானங்களின் அருகில் கூட விடுவதில்லை; அமெரிக்க தளபதியிடம் நேருக்கு நேர் சொன்னார் இந்திய தளபதி
புதுடில்லி: 'அமெரிக்க படையினர் இந்திய அதிகாரிகளை எப் 35 போர் விமானத்தின் அருகில் கூட விடமாட்டார்கள்,'' என அமெரிக்க தளபதியிடம் இந்திய விமானப்படை தலைமை தளபதி மார்ஷல் ஏ.பி. சிங் நேருக்கு நேர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமெரிக்க விமானப் படைகளின் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடருடன் இந்திய விமானப் படை தளபதி மார்ஷல் ஏ.பி. சிங் இணைந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது மார்ஷல் ஏ.பி. சிங் கூறியதாவது: அமெரிக்க படையினர் இந்திய அதிகாரிகளை எப் 35 ரக ஜெட் விமானத்தின் அருகில் கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். அமெரிக்கா எங்களுக்கு விமானத்தின் விமான அறையை காட்டவில்லை, ஆனால் அணிவகுப்பில் பறக்க அனுமதித்தது.
எப்- 35 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா எந்தவொரு அதிகாரப்பூர்வ முன்மொழிவையும் அளிக்கவில்லை; அதிகாரப்பூர்வமாக சலுகைகள் ஏதும் வழங்கவில்லை. ரஷ்யா தனது ஐந்தாம் தலைமுறை எஸ்யு-57 போர் விமானங்களை வழங்க முன்வந்துள்ளது; ஆனால், இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதில் அளித்த அமெரிக்க தளபதி, 'எப் 35 போர் விமானத்தில் எதை பிற நாட்டவர்களுக்கு காட்டலாம், காட்டக்கூடாது என்று முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை' என்று சமாளிக்கும் வகையில் பதில் அளித்தார்.
அதனால்தான் நாம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் R&D முதலீடு செய்து, புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய வேண்டும். அதற்குச் சிறந்த கல்வி அவசியம் உயர்கல்வியில் இடஒதுக்கீடு கோருவதையோ, நீட் NEET போன்ற தேர்வுகளைக் கண்டு அஞ்சுவதையோ அல்லது கரப்பான் பூச்சிகளைப் போலப் போராடுவதையோ நாம் தவிர்க்க வேண்டும்.
It is unprofessional of him to deliberate this way as IAF chief, that too in a press conference. He should be relieved from his post.
இது அமெரிக்க பெருசுக்கு தெரியுமா? தெரிஞ்சா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் அமெரிக்க அதிபர் மஸ்க்க்கு ஒரு வெங்காய பஜ்ஜி 1/2 டீ பார்சல்
அதை மீறிய விமானங்கள் இந்தியாவிடம் இருக்கிறது. F35 வைத்து இந்தியாவின் வலிமையை மிரட்ட முடியாது?
முகத்துக்கு முன்பாக சுட்டிக் காட்டியது சிறப்பு ..... கூட்டுப் பயிற்சியின்போது / ஒத்திகையின்போது பார்க்க அனுமதிப்பது தவறில்லை .... தொழில்நுட்பத்தை விவரிக்கச் சொல்லி யாரும் கேட்கவில்லையே ??
இதற்கு பதில் அளித்த அமெரிக்க தளபதி, எப் 35 போர் விமானத்தில் எதை பிற நாட்டவர்களுக்கு காட்டலாம், காட்டக்கூடாது என்பது என் கையில் இல்லை அமெரிக்கா அதிபர் இல்லான் மாஸ்க் இடம் உள்ளது
இந்த லட்சணத்தில் Star Link அனுமதி வேண்டுமாம்.
சீனாவிடம் இவர்களின் F35 விமானத்தின் புளு பிரிண்ட் கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது ஏனென்றால் சீனர்கள் தயாரித்த விமானத்துக்கு பெயரும் கூட 35ல் முடிகிறது. இந்தியாவுக்கு காப்பியடிக்க வேண்டிய அவசியம் இல்லை. DRDO வுக்கும் இஸ்ரோவுக்கும் அமெரிக்கர்களை விட சிறப்பான தொழில்நுட்பத்தை உருவாக்கும் தகுதி உண்டு.
சரியான பதிவு!