வனவிலங்குப் பூங்காவில் புலி தாக்கியதில் ஒருவர் பலி
-நமது நிருபர்-
இங்கிலாந்தின் டான்காஸ்டர் அருகே உள்ள யார்க்ஷயர் வனவிலங்குப் பூங்காவில் புலி அடைக்கப்பட்டு இருந்த பகுதிக்குள் நபர் ஒருவர் நுழைந்தார். அந்த நபர் புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இங்கிலாந்தின் டான்காஸ்டர் அருகே யார்க்ஷயர் வனவிலங்குப் பூங்கா அமைந்துள்ளது. இங்கு நேற்று (அக் 10) மதியம் 1.35 மணியளவில் புலி அடைக்கப்பட்டு இருந்த பகுதிக்குள் நபர் ஒருவர் நுழைந்துவிட்டார். இதில் புலி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த நபரை டாக்டர்கள் குழுவினர் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த நபர் உயிரிழந்துவிட்டார்.
அவரது அடையாளங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர். தற்போது பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். புலி தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோவை பகிர வேண்டாம் என மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
டில்லியில் தடையற்ற இணைய சேவை, மக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
எப் 35 போர் விமானங்களின் அருகில் கூட விடுவதில்லை; அமெரிக்க தளபதியிடம் நேருக்கு நேர் சொன்னார் இந்திய தளபதி
-
சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
ஓராண்டு காலம் அமைதிக்கு இடையூறு செய்யக்கூடாது; கரப்பான் கட்சியினருக்கு கோர்ட் நிபந்தனை
-
ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது: மைக்ரோசாப்ட் சிஇஓ அறிவுறுத்தல்
-
சவுதியின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதுணையாக நிற்கிறோம்: ஹவுதி தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்