ஓராண்டு காலம் அமைதிக்கு இடையூறு செய்யக்கூடாது; கரப்பான் கட்சியினருக்கு கோர்ட் நிபந்தனை

21

புதுடில்லி: டில்லியில் நேற்று (அக் 10) கைது செய்யப்பட்ட கரப்பான் கட்சியின் நிர்வாகிகள் 3 பேர், ஓராண்டு காலம் அமைதிக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று போராட்டம் நடத்த வந்த கரப்பான்பூச்சி கட்சியினர் விரட்டியடிக்கப்பட்டனர். மும்பையில் இருந்து டில்லிக்கு புறப்பட்டு வந்த அக்கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் அவரது கூட்டாளிகள் என 3 பேரையும் விமானத்தில் வைத்தே டில்லி போலீசார் கைது செய்தனர்.

தலைநகர் முழுவதும், 25,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் நோக்கி வந்த 5,000க்கும் மேற்பட்டோரை போலீசார் வளைத்து, வளைத்து பிடித்து தடுப்பு காவலில் வைத்ததால், போராட்டம் பிசுபிசுத்துப் போனது. இந்நிலையில் இன்று (அக் 11) கைது செய்யப்பட்ட கரப்பான் கட்சியின் நிர்வாகிகள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் 3 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓராண்டு காலம் அமைதிக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement