சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி

5

சென்னை: சென்னையில் இன்று (அக்டோபர் 11), பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜயுடன் ஒன்றாக பிரதமர் மோடி பயணம் செய்தார்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க டில்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு இன்று (அக் 11) பிரதமர் மோடி வந்தார். அவரை முதல்வர் விஜய் நேரில் வரவேற்றார். சென்னை விமான நிலையம் அருகே பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடிக்கு ஆடல், பாடல் கலைநிகழ்சியுடன் பாஜவினர் வரவேற்பு அளித்தனர். பிறகு, சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பணிகள் முடிக்கப்பட்ட பூந்தமல்லி - வடபழனி இடையே, 15 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். பிரதமர் மோடிக்கு மெட்ரோ ரயில் மினியேச்சரை பரிசாக முதல்வர் விஜய் வழங்கினார்.

டிக்கெட் பெற்று பயணம்

போரூரிலிருந்து பூந்தமல்லிக்கு யுபிஐயில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்று மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். அவருடன் முதல்வர் விஜயும் பயணம் செய்தார். இந்த திட்ட பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கினர். அதனை அவர் கேட்டறிந்தார்.
Latest Tamil News
Latest Tamil News
@block_Y@


சாமி தரிசனம்



சென்னை ஐஐடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி தாமரை பூ வைத்து வழிபாடு நடத்தினார். அவருடன் முதல்வர் விஜய், கவர்னர் அர்லேக்கர் சாமி தரிசனம் செய்தனர். ஜலகண்டேஸ்வரர் கோவிலின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கமாக தெரிவித்தார்.block_Y

சென்னை ஐ.ஐ.டி.,யில் நடக்கும் நிகழ்ச்சியில், 10க்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட் அப்' நிறுவன அதிபர்களை சந்தித்து, மோடி கலந்துரையாடுகிறார். தெற்கு ரயில்வேயில், 750 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை திறந்து வைக்கிறார். பின்னர், இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பணிகள் நிறைவடைந்த சாலை திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்
Latest Tamil News
மேலும், 4,900 கோடி ரூபாயில் பணிகள் முடிக்கப்பட்ட பூந்தமல்லி - வடபழனி இடையே அமைக்கப்பட்டுள்ள, 11 மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார். எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில், 482 கோடி ரூபாய் மதிப்பில், நிலக்கரி கையாளும் கப்பல் தளம் மற்றும் பொது சரக்கு கையாளும் கப்பல் தளத்தை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

இதேபோல், மணலியில் உள்ள சி.பி.சி.எல்., கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில், 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும், 'லுாப் ஆயில்' தயாரிப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், மாலையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பங்கேற்கிறார்.

Advertisement