ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது: மைக்ரோசாப்ட் சிஇஓ அறிவுறுத்தல்
புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ தொழில்நுட்பம்) குறித்து பல்வேறு முக்கிய கருத்துக்களை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை அப்படியே நம்புவதை நிறுத்த வேண்டும். நிறுவனங்கள் மிகவும் ஆற்றல் வாய்ந்த மேம்பட்ட ஏஐ மாடல்களைப் பயன்படுத்தும்போது, அவற்றுக்கு ஒரு 'எமர்ஜென்சி பிரேக்' போன்ற கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பம் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்துகொண்டிருக்கும்போது, ஏதேனும் தவறு நடந்தால் அதை நடுவிலேயே நிறுத்தவோ அல்லது முடக்கவோ தகுதியுடைய மனிதர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். ஏஐ மாடல்களை உருவாக்கும் நிறுவனங்களின் உறுதிமொழிகளை மட்டுமே நிறுவனங்கள் நம்பிவிடக் கூடாது.
எந்தவொரு அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய ஏஐ மாடலை பயன்படுத்தினாலும், அது பாதுகாப்பற்றது, அச்சுறுத்தலானது என்ற அடிப்படையிலேயே அணுகி, ஆரம்பத்திலிருந்தே அதற்கான கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்க வேண்டும்.
நிறுவனத்தின் ரகசியத் தகவல்களைத் திருடக்கூடிய அல்லது தவறாகப் பயன்படுத்தக்கூடிய நிறுவனத்திற்குள் இருக்கும் ஒரு ஊழியரைப் போலவே நினைத்து எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஏஐ என்பது ஒரு மனிதனின் முடிவுகளை எடுக்கும் இறுதி அதிகார அமைப்பாக மாறிவிடக் கூடாது.
எவ்வளவு பெரிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பமாக இருந்தாலும், அதன் செயல்பாடுகள் மனிதர்களால் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு சத்யா நாதெல்லா கூறியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் இந்த கருத்து உலகளவில் பெரும் முக்கியத்துவம் மாறி இருக்கிறது.
பிறகு ஏன் உங்கள் விண்டோஸில் ஏ ஐ கொம்பொனென்ட்ஸ் களைத் திணிக்கிறீர்கள் ??
ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. அதேபோன்று எலான் மஸ்க் போன்றவர்களை நம்பி அவர்களின் நிறுவனங்களில் பணியில் தொடரக்கூடாது.
பொதுவான எளிதாக செய்யக்கூடிய வேலைகளை தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்தால் ஏஐ பயனுள்ளதுதான். அதே சமயம் சிக்கலான விஷயங்களை தெளிவான கட்டளை மூலம் எளிதாக செய்ய முடியும். என்னிடம் முதலில் பலர் சிக்கலான மொபைல் ஆப் செய்வது சிரமம் என்று சொன்னார்கள் - ஆனால் உண்மையில் மிக எளிது. ஒவ்வொரு கட்டத்திலும் தெளிவாக புராம்ப்ட் கொடுத்து அதை சரிபார்த்தல் வெற்றிக்கு உத்திரவாதம் உண்டு.மேலும்
-
வனவிலங்குப் பூங்காவில் புலி தாக்கியதில் ஒருவர் பலி
-
எப் 35 போர் விமானங்களின் அருகில் கூட விடுவதில்லை; அமெரிக்க தளபதியிடம் நேருக்கு நேர் சொன்னார் இந்திய தளபதி
-
சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
ஓராண்டு காலம் அமைதிக்கு இடையூறு செய்யக்கூடாது; கரப்பான் கட்சியினருக்கு கோர்ட் நிபந்தனை
-
சவுதியின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதுணையாக நிற்கிறோம்: ஹவுதி தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
-
பெண் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் வழங்க உறுதியேற்போம்; முதல்வர் விஜய் உறுதி